8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது

Go down

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது Empty 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது

Post by SPEED ONE on Wed Apr 10, 2013 10:35 pm

சென்னை மேற்கு முகப்பேறு 5வது பிளாக்கைச் சேர்ந்த 8 வயது சிறுமி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கீதா பக்கத்து வீட்டில் போய் விளையாடுவது வழக்கம். அந்த வீட்டில் வசிக்கும் கொத்தனார் வேலை செய்யும் 38 வயதுடைய வெங்கடேசன் என்பவர், கீதாவை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

இதனால் கீதாவின் பெற்றோர்கள், சென்னை நொளம்பூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டருக்கு நெருக்கமான பெண் எஸ்ஐயிடம் புகார் கொடுத்தார். அதற்கு பிறகு அதிமுக புள்ளிகள் இந்த புகாரை வாங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் அந்த எஸ்ஐ, புகார் கொடுத்தவர்களிடம், பத்திரிகையில் பெயர் வரும், அசிங்கமாகிவிடும் பெண்ணின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள் என்று சொல்லி பஞ்சாயத்து செய்து புகாரை பெறாமல் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய, அதற்கு பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது Empty Re: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது

Post by RANIMAGESAN2004 on Thu Apr 11, 2013 2:37 pm

இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் நம்ம கிராமங்களில் தரும் தண்டனையான கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி கழுதை மேலெ உட்கார வச்சு செருப்படி தரணும்.

RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது Empty Re: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது

Post by SPEED ONE on Thu Apr 11, 2013 10:20 pm

RANIMAGESAN2004 wrote:இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் நம்ம கிராமங்களில் தரும் தண்டனையான கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி கழுதை மேலெ உட்கார வச்சு செருப்படி தரணும்.
மிகவும் சரியான கருத்து.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது Empty Re: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சென்னையில் ஒருவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum