குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

3 posters

Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by ????? Wed Mar 27, 2013 4:41 pm

இந்த கட்டுரைக்கு உங்கள் விமர்சனம் தேவை.

இன்று தமிழ்...தமிழ் என்று பலர் (நம்மையும் சேர்த்து) முழக்கமிடுவதைக் காண்கிறோம். தமிழ் மொழி என்பது தெய்வமொழி. மற்ற எந்த ஒரு மொழிக்கும் இந்த அடைமொழி கிடையாது. சாத்தூர் சேகரன் என்ற மொழியியல் அறிஞர் கூற்றுப்படி உலகில் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ். மற்றொன்று திரிந்த தமிழ்.

தனி ஒரு மனிதன் மாறும் போது சமுதாயமும் மாறுகிறது. பெரும் பான்மையான தனி மனிதர்களின் எண்ணமே நம் எதிரே சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது. நாம் சமுதாயம் மோசமாகிவிட்டது என்று சொல்கிறோம். உண்மையில் நாம்தான் மோசமாகி விட்டோம்.

தமிழ் வாழ்க என்று சொல்லும் தலைவர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள்... உண்மையில் தமிழை வாழ வைக்கிறார்களா? அல்லது தமிழால் அவர்கள் வாழ்கிறார்களா?....தேவையில்லை இந்த வாதம் நமக்கு.

மொழி என்ன செய்தது நமக்கு என்பதை விட நாம் என்ன செய்தோம் நம் மொழிக்கு என்று பார்க்கலாம். இதற்காக மாநாடு, போராட்டம், பந்தா... இவையெல்லாம் செய்யவேண்டியதில்லை. சிறிய உத்திகளைக் கையாண்டாலே போதும். உறவுகளும் தங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள். தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

இதுவரை சொல்லிய உத்திகள் :-

1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.
உங்களது குழந்தைகளை இப்போதிலிருந்தே தமிழில் கையொப்பமிடுவதை கற்றுக்கொடுங்கள்.

2. உறவுகளை அழைக்கும்போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப்பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.

3. எதிராளி தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.

4. உங்களது VISITING CARD களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிராளியிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.

5. உங்கள் LETTER HEAD போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.

6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.

7. வங்கிச் சேவைகளில் தமிழ் மட்டுமே பயன்படுத்தவும்.
(எ.கா) ATM சேவையில் தமிழ் இருந்தால் தமிழைப் பயன்படுத்தவும். நீங்கள் பயன்படுத்தும் காசோலைகளில் தமிழில் மட்டுமே எழுதவும். படிவங்களில் தமிழில் எழுதவும்.

8. மற்ற அலுவலகங்களுக்குச் செல்லும்போது உள்ளே செல்லும்போது வருகையாளர் பதிவேடு (VISITOR’S LOGBOOK) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், உங்களது நிறுவனம், பார்க்கவேண்டிய நபர், நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

9. சொந்த வீட்டின் வெளியே உங்கள் பெயரை கல்லால் செதுக்கும்போது முகவரியையும் சேர்த்து தமிழில் எழுதுங்கள்.

10. வெளியூருக்குச் (தமிழ்நாட்டுக்குள்) சென்று விடுதிகளில் (LODGE) தங்கும்போது, பதிவேடு (GUEST REGISTER) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், முகவரி, வந்த நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

11. செல்பேசி (அ) தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் போது தமிழில் சொல்லுங்கள். அதாவது உங்கள் எண் 94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது... தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது...என்று தமிழில் சொல்லுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.

12. MARIO PUZO, SIDNEY SHELDON….போன்றவர்களின் புத்தகத்தை விடுத்து கையில் எப்போதும் நல்ல தமிழ்ப்புத்தகம் ஏதாவது ஒன்று வைத்திருங்கள். முக்கியமாக அட்டை போட்டு மறைத்துவிடாமல் மற்றவர்களுக்கு தெரிவது போல் எடுத்துச்செல்லுங்கள்.

13. கோயிலுக்குச் செல்லும்போது தேங்காய் பழத்தோடு அவரவர் சமய தமிழ்ப்புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். (எ.கா.) தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை.

14. வீடுகளில் மாட்டும் நாட்காட்டி மற்றும் சுயமுன்னேற்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தமிழில் இருந்தால் மட்டும் மாட்டுங்கள். இல்லாவிட்டால் சுவர் சும்மாவாவது இருக்கட்டும்.

15. குழந்தைகள் பெரியவர்கள் போடும் பனியன்களில் தமிழ் வாசகங்கள் இருந்தால் மட்டும் அணிவியுங்கள்...அணியுங்கள்.(ஆங்கிலத்தில் எழுதியுள்ள வாசகங்களை அணிந்துள்ளவர்களிடம் அதை தமிழில் சொல்லுங்கள் என்று கேளுங்கள். அந்த வாசகங்கள் எவ்வளவு ஆபாசமானது.. அர்த்தமற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள். ஒரு இளம்பெண் அணிந்திருந்த T SHIRTல் எழுதியிருந்த வாசகம்: THIS MUCH I EAT ).

16. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள் சொல்வதை (எ.கா: மோ...மை...எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்) நம்பாமல் தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள். (ஒரு நண்பர் தன்னுடைய மகனுக்கு தீட்ஷித் என்று பெயர் வைத்திருந்தார். அது வடநாட்டு சாதிப்பெயர் என்று தெரியாமல்!)

17. அரசாங்க தொடர்புடைய அலுவலகங்களுக்கு (எ.கா: மின்சார வாரியம்) அல்லது வங்கிக்கு கடிதம் எழுதும் போது தமிழில் மட்டுமே எழுதுங்கள்.

18. திருமணப்பரிசு அளிக்கும்போது நல்ல தமிழ்ப்புத்தகங்ககளை அளியுங்கள். எடுத்துக்காட்டு திருக்குறள் . திருக்குறளுக்கு உரையாசிரியர் மிகவும் முக்கியம். சார்பு உடையவர்கள் உரைகளை வாங்காமல் கா.சு.பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ..ராமலிங்கம் பிள்ளை, தேவநேயப்பாவாணர் உரைகளை வாங்கலாம். அதேபோல் திருக்குறளைப் போல் ஒன்றே முக்கால் அடி உரைகளை வாங்காதீர்கள்.. நல்ல விரிவான உரைகளை வாங்குங்கள்.

19. விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.

20. இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.

21. கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள்.
எ.கா: திருவள்ளுவராண்டு 2044 மீனம் (பங்குனி) 09 / ஆங்கில தேதி 22 மார்ச் 2013. திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.

22. தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)

23. எதெற்கெடுத்தாலும் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதற்கு பதிலாக ‘மன்னிக்கவும்’...’மன்னிக்கனும்’...’மன்னிச்சுங்குங்க’... என்று சொல்லுங்கள். அதே போல் ‘ப்ளீஸ்’ என்பதற்கு பதிலாக ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

24. மகிழுந்துகளில் செல்லக்குழந்தைகளின் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள்.

25. மகிழுந்துகளில், இரு சக்கர வாகனங்களில் தங்களின் தொழிலை எழுதும் போது தமிழில் எழுதுங்கள். எ.கா: ஊடகம் (PRESS), மருத்துவர் (DOCTOR), வழக்கறிஞர் (ADVOCATE) இன்னும்பிற.

26. தமிழ்நாட்டில் குழந்தைகளை தமிழில் படிக்க வைக்க வசதி இல்லை (அரசாங்கப் பள்ளிகளைத் தவிர). குறைந்தபட்சம் மொழிப்பாடம் தேர்வு செய்யும் போதாவது தமிழ் மொழிப்பாடம் தேர்வு செய்யுங்கள். ஹிந்தி மொழி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று சொல்லுகிற புரூடாவையெல்லாம் நம்பாதீர்கள். இன்றைய தேதியில் ஹிந்தி நன்கு தெரிந்த (தாய் மொழியாக கொண்டவர்கள்தான்) தமிழ்நாட்டில் அதிகம் வேலைப் பார்க்கிறார்கள். மேலும் ஒரு மொழியைப்படிப்பதற்கு 3 மாதங்கள் போதும். எத்தனை மொழி வேண்டுமானாலும் பள்ளிக்கு வெளியே கற்றுக் கொடுங்கள்.

27. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழ் எழுத்துரு இல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அனுப்புங்கள். இதை TEMPLATE ல் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
எ.கா: I’LL CALL YOU LATER என்பதற்கு NAAN PIRAGU AZHAIKKIREN (நான் பிறகு அழைக்கிறேன்).

28. இப்பொழுதெல்லாம் தமிழில் மின்னஞ்சல் செய்வதில் GMAIL லில் எளிமையான பல வசதிகள் உள்ளன. மின்னஞ்சல் அனுப்புவதற்கு தமிழைப் பயன்படுத்துங்கள்.

29 அதேபோல் PASSWORD வார்த்தைகளுக்கும் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். (எ.கா) SAIVAM - சைவம்

30. ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு உள்ள படிவங்களை தமிழில் மட்டுமே பதிவு செய்யுங்கள். படிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது.
(தமிழ் வளரும்)

?????
Guest


Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by பாட்டுப் புத்தகம் Wed Mar 27, 2013 7:51 pm

இது யாருடைய கட்டுரை? எங்கிருந்து எடுத்தீர்கள்? என்பதை குறிப்பிட்டால் விமர்சனம் செய்யலாம்...

பாட்டுப் புத்தகம்
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 130
Join date : 27/03/2013
இருப்பிடம் : தமிழ்நாடு

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by SPEED ONE Thu Mar 28, 2013 7:27 pm

பூதம் wrote:
இந்த கட்டுரைக்கு உங்கள் விமர்சனம் தேவை.
இது என்ன அவ்வளவு பிரமாதமான கட்டுரையா? இதற்கு ஏன் என்னுடைய விமர்சனம்? சிந்திக்கத் தெரியாதவர்கள்தான் இதை ஆகா... ஓகோ... என்று பாராட்டுவார்கள்.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே இது ஒரு வீண் பிதற்றல் என்பதை கட்டுரையாளரே சொல்லிவிட்டாரே... அதன் பிறகு ஏன் விமர்சனம்.
சாத்தூர் சேகரன் என்ற மொழியியல் அறிஞர் கூற்றுப்படி உலகில் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ். மற்றொன்று திரிந்த தமிழ்.
அப்படியென்றால் உலகில் உள்ள எல்லா மொழியும் (திரிந்த)தமிழ் என்று தானே அர்த்தம். பிறகு எந்த மொழியில் பேசினால் என்ன? எல்லாம் தமிழென்றுதானே அர்த்தம்...

11. செல்பேசி (அ) தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் போது தமிழில் சொல்லுங்கள். அதாவது உங்கள் எண் 94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது... தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது...என்று தமிழில் சொல்லுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.
அது என்ன செல்பேசி? இது தமிழா?!.... "Cell Phone" அப்படின்னு கூகுள் மொழிபெயர்ப்பில் எழுதினால் "கைபேசி" என்று காட்டுகிறது! ஆனால், இந்த தமிழ் ஆர்வ(ல)கோளாளர்" 'செல்பேசி' என்று கூறியுள்ளார்! ஒருவேளை செல்போன்ல பேசுறதால 'செல்பேசி'ன்னு சொல்லிருப்பாரோ? அப்படின்னா செல்போன்ல பேசுறதையும் நாம கேக்குரோமே அதனால நான் இன்னையிலேருந்து இதை "செல்கேட்டி" அப்படின்னு அழைக்க உத்தரவிடுகிறேன்!!

94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு... என்று சொல்வதை விட கூ, சா, சா, சா, 0, கூ, சா, சா, சா, 0 இப்படி சொன்னா இன்னும் தமிழ் வளருமே....

இந்தக் கட்டுரையில் உள்ள எல்லா தகவலும் இன்று நடைமுறையில் இருக்கிறது. ஆனால், என்னமோ புதுசா சிந்திச்சு எழுதிட்ட மாதரி அப்படி பேசு, இப்படி எழுதுன்னு நமக்கு அர்ச்சனை பண்ணிக்கிட்டு இருக்காரு.

புள்ளை குட்டிகளை நல்லா படிக்க விடுங்கடா!... படிக்கும் போதே அதைப் படிக்காதே இதைப் படிக்காதேன்னு எதையாவது நொட்டை சொல்லிகிட்டே இருக்க வேண்டியது, படிச்சு முடிச்சதும் அதைப் பேசாதே இதைப் பேசாதேன்னு மறுபடியும் புலம்ப வேண்டியது. இப்படியெல்லாம் கட்டுரை எழுதினால் கண்டிப்பாக உருப்படாது.... இந்த மாதரி சிலர் புலம்பித்திரிவதை நிறுத்தினாலே தமிழ் நன்றாக இருக்கும்.

தேய்ந்து வளர்வதற்கு தமிழ் என்ன சந்திரனா? தமிழ் என்பது சூரியன்! எனவே ஒரு போதும் தேயவும் செய்யாது, வளரவும் செய்யாது, உலகம் இயங்கும் வரை தமிழும் இருக்கும்!!

அதனால இந்த மாதரி அரைவேக்காட்டு, வெற்றுப் புகழ்தேடும் பதிவை எல்லாம் இங்கே காப்பி செய்து போடாதீர்கள்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by பாட்டுப் புத்தகம் Fri Mar 29, 2013 6:16 pm

சிறந்த விமர்சனம் SPEED ONE.

பாட்டுப் புத்தகம்
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 130
Join date : 27/03/2013
இருப்பிடம் : தமிழ்நாடு

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by RANIMAGESAN2004 Sat Mar 30, 2013 12:39 pm

ithula irukkira maathiri ellaam intha kaalaththil kadaipidikka mudiyaathu. ithai eluthiyavare itula onru irandaavathu kadaipadippaaraa enbathu santhegame

RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by SPEED ONE Sat Mar 30, 2013 5:54 pm

RANIMAGESAN2004 wrote:ithula irukkira maathiri ellaam intha kaalaththil kadaipidikka mudiyaathu. ithai eluthiyavare itula onru irandaavathu kadaipadippaaraa enbathu santhegame

சரியாக சொன்னீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. (கூகுள் டிரான்ஸ்லேட்டரில் இருந்து தமிழில் எழுதுங்கள் ராணிமகேசன்.)

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by SPEED ONE Sat Mar 30, 2013 5:55 pm

பாட்டுப் புத்தகம் wrote:சிறந்த விமர்சனம் SPEED ONE.
நன்றி பாட்டுப் புத்தகம் நண்பரே. உங்கள் பெயரில் அல்லது ஏதாவது ஒரு பெயரில் வரலாமே....

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by பாட்டுப் புத்தகம் Sat Mar 30, 2013 5:57 pm

SPEED ONE wrote:
பாட்டுப் புத்தகம் wrote:சிறந்த விமர்சனம் SPEED ONE.
நன்றி பாட்டுப் புத்தகம் நண்பரே. உங்கள் பெயரில் அல்லது ஏதாவது ஒரு பெயரில் வரலாமே....
ஏன் இந்தப் பெயர் நல்லா இல்லையா? (ஏதோ ஒரு பெயரில் தானே வந்திருக்கிறேன்.) Smile Smile

பாட்டுப் புத்தகம்
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 130
Join date : 27/03/2013
இருப்பிடம் : தமிழ்நாடு

Back to top Go down

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... Empty Re: தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum