கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம் :கல்லூரி பேருந்து ஓட்டுனர் கைது

Go down

கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம் :கல்லூரி பேருந்து ஓட்டுனர் கைது Empty கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம் :கல்லூரி பேருந்து ஓட்டுனர் கைது

Post by SPEED ONE on Fri Apr 12, 2013 10:24 pm

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்த தெய்வீகன் என்பவரின் மகள் சரண்யா, 21.( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் படித்து வந்தார்.

அதே கல்லூரியில், முத்தாகவுண்டனூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்பிரகாஷ், வயது-26, என்பவர், பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி, 13-ம் தேதி, வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்ற மாணவி சரண்யாவை, அருள்பிரகாஷ் கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர் ஆத்தூர் போலீஸில் புகார் செய்தனர்.

போலீஸார், அருள்பிரகாஷ் மீது, பெண்ணை கடத்திச் சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்திவந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அருள்பிரகாசை நேற்று கைது செய்த போலீசார், அவர்மீது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மீட்கப்பட்ட மாணவியை, ஆத்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் வேலரஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum